வங்கி மோசடி வழக்குகள் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தொழிலதிபர்கள், வங்கி அதிகாரிகளுக்கு எதிராக மொத்தம் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளளன. இதில் சுமார் ரூ.640 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சொந்தமான 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைந்த முறையில் சோதனை நடைபெற்றது.