ளை உருவாகிறது சென்னை, நவ. 4 - தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொட ங்கினாலும், பருவமழைக்கான முழுவதுமான கிழக்கு காற்று தற்போது தான் தென்னிந்திய பகுதிகளில் பரவியுள்ளது.
இதனால் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் அடைய இருக்கிறது.
அதிலும் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அதன்படி தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து ள்ளது. இதன் தொடர்ச்சியாக வட மாவட்டங்களிலும் மழை, தீவிரம் அடைய இருக்கிறது. புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை வங்கக்கடலில் காற்றழுத்ததாழ்வுப் பகுதி உரு வாக வாய்ப்பு இருப்பதாக வானி லை ஆய்வு மையம் அறிவித்துள் ளது.
அடி வாங்கிய இந்தியப் பங்குச் சந்தைகள்
மும்பை, நவ. 4 - இந்திய பங்குச் சந்தைகள், கடந்த வாரம் தொடர் சரிவைச் சந்தித்த நிலையில், இந்த வாரத்திலும், வர்த்தகத்தின் முதல் நாளான திங்கட்கிழமை கடும் அடி வாங்கியுள்ளது. மும்பைப் பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், 1,400 புள்ளிகள் சரிவுடனும், தேசியப் பங்குச் சந்தை நிப்டி 430 புள்ளிகள் சரிவுடனும் வர்த்த கத்தைத் துவங்கின. வர்த்தக முடி வில் சென்செக்ஸ் 942 புள்ளிகள் வரையும், தேசியப் பங்குச் சந்தை யான நிப்டி 309 புள்ளிகளும் அடிவாங்கின.
இந்தியாவின் அடுத்த நிதி ஆண்டுக்கான வருவாய் மதிப்பீடு களில் ஏற்பட்ட சரிவு, வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் வெளியேறியது, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவையே பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
“விஷத்தைப் பாதுகாக்க நினைப்போர் மருந்துகளைத் தடை செய்கின்றனர்”
சென்னை, நவ. 4 - வெனிசுலாவில் நடை பெறும் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் பல நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவதாசன் பங்கேற்க இருந்தார். ஆனால், அவர் மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இந்த செயலுக்கு, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தமது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “சிபிஎம் கட்சியின் சிவதாசன் எம்.பி. பங்கேற்க ஒன்றிய அரசு தடை விதித்திருப்பது ஜனநாயக விரோதமானது. விஷத்தைப் பாதுகாக்க நினைப்பவர்கள், மருந்துகளை தடைசெய்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.