2018 முதல் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளில் சுமார் 77% பேர் உயர் சாதி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று மாநிலங்களவையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் தெரிவித்துள்ளார்.
உயர் நீதித்துறையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவ விவரங்கள் குறித்து ஆர்ஜேடி எம்பி மனோஜ் குமார் ஜா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால், 2018 முதல் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளில் சுமார் 77% பேர் உயர் சாதி பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், 2018 முதல் நியமிக்கப்பட்ட 715 உயர்நீதிமன்ற நீதிபதிகளில், 22 பேர் எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள், 16 பேர் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள், 89 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 37 பேர் சிறுபான்மையினர், 551 நீதிபதிகள் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.