நாக்பூர்:
2019-ஆம் ஆண்டில், காஷ்மீரின் புல்வாமா என்ற இடத்தில், இந்தியராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப் பட்டனர்.இந்த பின்னணியில், பாதுகாப்பை பலப்படுத்தும் திட்டத்தின் பெயரில், பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய திட்டமிட்ட மோடி அரசு, உள்ளூர் தனியார்ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பல்முனை கையெறி குண்டுகளை MultiMode Hand Grenades (MMHG) வாங்குவதற்கும் முடிவு செய்தது.
இதன்படி, ராணுவம் மற்றும்விமானப்படையினர் பயன்படுத்தும் 10 லட்சம் நவீன கையெறிக் குண்டுகளை தயாரித்து வழங்குவதற்கான காண்ட்ராக்ட்டை, நாக்பூரை சேர்ந்த எக்கனாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட் (Economic Explosives Ltd - EEL) என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 2020 அக்டோபர் 1-இல் கையெழுத்தானது.ரூ. 409 கோடி மதிப்பிலான இந்தஒப்பந்தம், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், இந்திய ராணுவத்தின் வசமுள்ள உலகப் போர்க்கால பழமையான வடிவமைப்பில் உள்ள கையெறி குண்டுகளுக்கு மாற்றாக இந்தபுதிய கையெறி குண்டுகள் இருக்கும் என அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், நாக்பூரைச் சேர்ந்த ‘இஇஎல்’ நிறுவனம் முதற்கட்டமாகதயாரித்த 1 லட்சம் கையெறி குண்டுகள் பாதுகாப்புத் துறை அமைச்சர்ராஜ்நாத் சிங் முன்னிலையில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நாக்பூரில் நடைபெற்ற இதற்கானநிகழ்ச்சியில், மாதிரி கையெறி வெடிகுண்டை இ.இ.எல். நிறுவன தலைவர் எஸ்.என். நிவல், ராஜ்நாத் சிங்கிடம் வழங்கியுள்ளார். நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரி எம்.எம். நரவனே, டி.ஆர்.டி.ஓ. சேர்மன் சதீஸ் ரெட்டி, ஏ.கே. சமந்திரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் வெடிகுண்டு தயாரிக் கப்படுவது இதுவே முதல்முறை என இ.இ.எல். நிறுவனம் தெரிவித்து உள்ளது. பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்புக்கு, இந்த காண்ட்ராக்ட் ஒரு பிரகாசமான உதாரணம் என்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்உருகியுள்ளார். பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை நோக்கி எடுத்து வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அடி;பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான ‘ஆத்ம நிர்பர் பாரத் அபியான்’ திட்டத்திலும் இது ஒரு முக்கியமான மைல்கல்” என்று அகமகிழ்ந் துள்ளார்.தற்போது ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ள கையெறி குண்டுகள் கடந்த 2017, 2018-ஆம் ஆண்டுகளில் பாலைவனம், அதிக வெப்பநிலை நிலவும் கோடைக் காலம், குளிர்காலம் ஆகிய பல தட்பவெட்ப நிலையில் வைக்கப்பட்டு கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.