புனே:
கொரோனா பரவுதல் குறித்து மூன்றாம் கட்ட தொற்று ஆய்வு சுகாதார ஊழியர்களிடம் நடத்த இந்திய மருத்துவ ஆய்வுக் குழு( ஐசிஎம்ஆர்) திட்டமிட்டுள்ளது.இந்திய மருத்துவ ஆய்வுக் குழு கொரோனா பரவுதல் குறித்து இதுவரை இரண்டு தொற்றாய்வை நடத்தியுள்ளது. இதன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி தேவைப் படுவோர் நிலை பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.வருகின்ற வியாழன் முதல் நடத்தப்படவுள்ள மூன்றாம் தொற்றாய்வில் 70 மாவட்டங்களில் உள்ள சுகாதார
ஊழியர்கள் உள்ளிட்ட 29 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாம் தொற்றாய்வு நடந்த அதே இடங்களில் இந்த ஆய்வும் நடைபெற உள்ளது.