மகாராஷ்டிரா,ஜனவரி.22- மகாராஷ்டிராவில் ஏற்பட்ட திடீர் ரயில் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜால்கான் பகுதியில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் மீது கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பக் ரயிலில் பயணி ஒருவர் தவறுதலாக தீ எச்சரிக்கை அலாரத்தை அடித்ததால், பயத்தில் இறங்கியவர்கள் மீது மற்றொரு ரயில் மோதியுள்ளது. இந்த சம்பவம் மாலை 5 மணிக்கு நடந்துள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்றுவருகிறது.