india

img

குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் சீரம் நிறுவனம்!

குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் குரங்கம்மை நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் குரங்கம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிற நிலையில், நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவி உள்ளது. நாட்டு மக்களின் உடல்நலனை பாதுகாக்கும் முயற்சியில் தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனாவாலா கூறியுள்ளார்.

இந்நிறுவனம், ஏற்கனவே கொரோனா காலத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.