india

img

புதுச்சேரியில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு 

புதுச்சேரியில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாகக் கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. இதனையடுத்து புதுச்சேரியில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர், கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி கூறுகையில், முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் 9, 10 ஆம் வகுப்புகளுக்கு ஒரு நாளும், 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஒரு நாளும் எனச் சுழற்சி முறையில் பள்ளிகளைத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, அனைத்து வகை கல்லூரிகளும் செப்டம்பர் 1 ஆம் தேதிமுதல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.