கொல்கத்தா:
‘பெகாசஸ் ஸ்பைவேர்’ செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் தொலைபேசி உரையாடல்கள் தன்னிடம் உள்ளதாக கூறி, மேற்கு வங்க பாஜகதலைவர் சுவேந்து அதிகாரி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகநிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசுகையில்தான் தன்னையறியாமலேயே சுவேந்து அதிகாரி உண்மையை உளறிக்கொட்டியுள்ளார்.
“அமர்நாத் என்ற சிறுவன் இங்குஎஸ்.பி. ஆக வந்துள்ளார். அவர் எதற்கு இங்கு வந் துள்ளார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என எல்லாம் எனக்குத் தெரியும். நான் பல ஆண்டுகளாக இங்கேயே இருக்கும் மூத்த அரசியல்வாதி என்பதை அமர்நாத் மறந்துவிடக் கூடாது. ஒன்றிய அரசின் அதிகாரியான அமர்நாத், அவரை காஷ்மீரின்அனந்தநாக் பகுதிக்கோ அல்லது பாரமுல்லா பகுதிக்கோ டிரான்ஸ்பர் செய்யவைத்துவிடக் கூடாது.மம்தாவின் மருமகன் (அபிஷேக் பானர்ஜி) தொடங்கி அவரது அலுவலகத்தில் இருந்து யாரெல்லாம் எஸ்.பி.அமர்நாத்தை அழைத்தார்கள் என்ற தகவலும், அவர்கள் என்ன பேசினார்கள் என்ற பதிவுகளும் என்னிடம் உள்ளது.உங்களிடம் மாநில அரசு இருக்கிறது என்றால், எங்களிடம் ஒன்றிய அரசு உள்ளது” என்று சுவேந்து அதிகாரி பேசியுள்ளார்.
இதனிடையே, சுவேந்து அதிகாரியின் பேச்சைக் குறிப்பிட்டு, டுவிட்டரில்பதிவிட்டுள்ள திரிணாமுல் பொதுச் செயலாளர் குணால் கோஷ், “திரிணாமுல் தலைவரின் அலுவலக தொலைப்பேசி பட்டியல், உரையாடல் பதிவுகள் தன்னிடம் இருப்பதாக சுவேந்து வெளிப்படையாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதுதொலைப்பேசி ஒட்டுக் கேட்கப்பட்டதற் கான சான்று. எனவே, சுவேந்துவை காவலில் எடுத்து விசாரிப்பதன் மூலம் முழுச்சதியும் வெளிச்சத்திற்கு வரலாம்” என்று தெரிவித்துள் ளார்.