india

img

கேரளாவுக்கு 4.35லட்சம் கோவிட் தடுப்பூசி மருந்து வருகை....

திருவனந்தபுரம்:
முதல் கட்டமாக 4.35 லட்சம் அளவிலான தடுப்பூசி கேரளாவுக்கு வழங்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலத்திற்கு தெரிவித்துள்ளது.

கேரளத்தில் முதல் கட்டமாக, 3,59,549 சுகாதார ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும். ஸ்ரீ சித்ரா மற்றும் இஎஸ்ஐ போன்ற மருத்துவமனைகளுக்கு மட்டுமே மத்திய அரசால் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பூனா சீரம் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 16 மையங்களுக்கு தடுப்பூசிவழங்குவதற்காக தடுப்பூசியுடன் குளிரூட்டப்பட்ட லாரிகள்விமான நிலையத்தை விட்டு வெளியேறியது. இந்த தடுப்பூசி முதல் நாளில் தில்லி, சென்னை, பெங்களூர், குவஹாத்தி உள்ளிட்ட 13 மையங்களை எட்டும். கோவிஷீல்ட் தடுப்பூசிகண்டெய்னர்கள் பூனா சீரம் நிறுவனத்திலிருந்து செவ் வாய்க்கிழமை காலை புறப்பட்டன.சீரம் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஒரு தடுப்பூசிக்கு ரூ.210 விலையில் 1.1 கோடி தடுப்பூசிகள் வழங்கிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசி போடுதல் ஜனவரி 16 முதல் நாட்டில் தொடங்கும். ஆரம்பத்தில், 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. முதல் கட்டத்தில், 30 மில்லியன் கோவிட் முன்களப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும். கேரளாவில் தடுப்பூசி விநியோகிக்க பெரிய அளவிலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.