ஸ்ரீநகர்:
ஜம்மு விமான நிலையத்தில் இரண்டு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு விமான நிலையத்தில் நள்ளிரவு 1.45 மணிக்கு 5 நிமிட இடைவெளியில் முதல் குண்டுவெடிப்பு மேற்கூரையிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தளத்திலும் ஏற்பட்டுள் ளது. இதனால், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.குண்டுவெடிப்பு குறித்து இந்திய விமானப் படை அதிகாரிகள் கூறுகையில், ஜம்மு விமானப் படை நிலையத்தின் தொழில்நுட்பப் பகுதியில் ஞாயிறன்று அதிகாலை குறைந்த சக்தி கொண்ட இரண்டு குண்டுகள்வெடித்தன. ஒரு குண்டுவெடிப்பு கட்டடத்தின்மேற்கூரையில் லேசான சேதத்தை ஏற்படுத்தி யுள்ளது. மற்றொன்று திறந்தவெளியில் வெடித்தது. இதனால், எந்தவொரு சாதனமும் சேதமடையவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.குண்டுவெடிப்பில் காயமடைந்த இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும், வெடிகுண்டு அகற்றும் நிபுணர்களும் ஆதாரங்களை திரட்டினர். பெருமளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.