india

img

நவ.25 முதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது; “ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில், வருகின்ற நவம்பர் 25 முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடருக்காக இரு அவைகளையும் கூட்ட குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், நவம்பர் 26ஆம் தேதி அரசிலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகளான தினத்தை கொண்டாடும் நிகழ்வு மைய மண்டபத்தில் நடைபெறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தொடரில், சர்ச்சைக்குரிய வக்ஃப் திருத்த மசோதா, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா உள்ளிட்டவைகள் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.