புதுதில்லி:
வழக்கமான விரைவு ரயில்கள் எப்போது இயக்கப்படும்? என்றும் கொரோனா தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள விரைவு ரயில் சேவை எப்போது தொடங்கும் என்றும் மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளிக்கையில், கொரோனா தொற்று காரணமாக மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று வழக்கமான பயணிகள் ரயில் சேவை கடந்தாண்டு மார்ச் 23 ஆம் தேதிமுதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது. திருவாரூர்- காரைக்குடி இடையே ரயில் சேவையை அறிமுகப்படுத்த தற்போதைக்கு ரயில்வேக்கு போதிய நிதி ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் வசதி,நிதி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
படம் : கோப்பு படம்