புதுதில்லி:
தேசத்திற்கே எப்போதும் முதலிடம் என்ற உணர்வோடு மக்கள் மக்கள் அனைவரும் செயலாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
அகில இந்திய வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளநிலையில், அமிர்த மஹோற்சவம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.கடந்த மார்ச் 12ஆம்தேதி தொடங்கப்பட்டஇந்த இயக்கத்தின்மூலம், விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து இளைய சமூ கத்தினர் தெரிந்துகொள்ள முடிந்ததாகக்கூறிய பிரதமர், இதன் ஒருபகுதியாக மக்கள்தேசிய கீதத்தைப் பாடி இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ராஷ்ட்ரகான்.இன் என்ற இணையதளத்தில் பதிவேற்றம்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தேசிய கைவினைப் பொருட்கள் தினம் ஆகஸ்ட் 7-ஆம் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், ஒவ்வொருவரும் காதி ஆடைகள் மற்றும் கைவினைப்பொருட்களை வாங்கி உபயோகிக்க முன் வரவேண்டும். இதன்மூலம் இத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்றும் தெரிவித்தார்.