புதுதில்லி:
கொரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொழில்துறை கடும் பாதிப்பைச் சந்தித்து, அது வேலைவாய்ப்பிலும் பெரிய அளவிற்கு தாக்கத்தை செலுத்தி வருகிறது.கொரோனா தொற்றுப் பரவல் உச்சத் தில் இருந்த காலத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த வேலைவாய்ப்பின்மை, அண்மைக் காலமாக, சற்று மீண்டு வந்தது. ஆனால், ஜூலை 25-ஆம் தேதியுன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது.குறிப்பாக ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை 6.75 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பாக வேலைவாய்ப்பின்மை அளவீடு 5.1 சதவிகிதமாக மட்டுமே இருந்த நிலையில், அது தற்போது 6.75 சதவிகிதமாகி உள்ளது. இதுவே நகர்ப்புறத்தில் 7.94 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை அளவு ஜூலை 25 உடன் முடிந்த வாரத்தில் 8.01 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.ஒட்டுமொத்தமாக நாட்டின் வேலைவாய்ப்பின்மை கடந்த வாரம் 5.98 சதவிகிதமாக இருந்தது, தற்போது 7.14 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது.