india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

புயல் எதிரொலியாக கனமழை பெய்யும் என்பதால் தென் மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்துகொள்ளுமாறு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. 

                                       ***********************

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலர் சண்முகத்துடன் மத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

                                       ***********************

விதிமுறைகளை மீறி பல்கலைக் கழகத்தில் வெளியிடப்பட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டது.

                                       ***********************

வீடுகளில் கொரோனா நோட்டீஸ் ஒட்டுவதால் அக்கம் பக்கத்தினர் தீண்டாமையுடன் நடத்த தொடங்குவர்என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினார். மேலும் மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிருப்திதெரிவித்துள்ளது.

                                       ***********************

சென்னையில் இருந்து காரைக் கால், திருச்செந்தூ ருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

                                       ***********************

உலகளவில் 5ஜி இணைப்பு களின் எண்ணிக்கை வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் 350 கோடியை எட்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்ஸன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.