புதுதில்லி:
ஞாயிறு - திங்கள் இடையே வேறுபாட்டில்லாமல் செய்ததே மோடி அரசின் சாதனை என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை நிறுத்த முடிவு செய்திரு ப்பது குறித்த பத்திரிகை செய்தியை பகிர்ந்துள்ளார். இந்த முடிவால் 4,000 சிறு நிறுவனங்கள் மூடப்படும் என்று தொழில்துறையினர் கூறி இருப்பது அந்த செய்தியில் இடம் பெற்றுள்ளது.அந்த பதிவில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழ மைக்கும், வேலை நாளான திங்கட்கிழமைக்கும் இடை யிலான வித்தியாசத்தை முடி வுக்கு கொண்டு வந்தது தான் மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி என்று அவர் விமர்சித்துள்ளார். மேலும் வேலையே இல்லாத போது அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால்என்ன? திங்கட்கிழமையாக இருந்தால் என்ன? என்றும் ராகுல்காந்தி கூறி யுள்ளார்.