india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளது. முதல் கட்டமாக தாய்லாந்து நாட்டின் தாய், சீன, ஜப்பானிய, கொரியா உள்ளிட்ட  18 மொழிகளில்மணிமேகலை காப்பியத்தை மொழி பெயர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

                                      ***************

அமைதியை நிலைநாட்டுவதில் தொழில்நுட்பம் மற்றும் ஆதரவு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியாவும், ஐ.நா.சபையும் ஏற்படுத்தியுள்ளன.அமைதியை நிலைநாட்டுவோருக்கு பயிற்சி மற்றும் ஆளுமை வளர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியமானதாக உள்ளது என்று இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

                                      ***************

இந்திய பாதுகாப்புத் துறை உற்பத்தி சவால் என்னும் ஐந்தாம் கட்ட திட்டத்தை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வியாழக்கிழமையன்று காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பாதுகாப்புத்துறை தொடர்பான நான்கு கட்ட திட்டங்களின் நீட்சியாக ஐந்தாம் கட்ட திட்டம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

                                      ***************

இரு நாட்டு பாதுகாப்புப்படை களை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியா, வியட்நாம் ஆகிய நாடுகளின் கடற்படை கூட்டுப் பயிற்சி தென் சீன கடற்படை பகுதிகளில் நடைபெற்றது.   

                                      ***************

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி யில் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற போலந்து நாட்டின் மரியா ஆண்ட்ரேய்சிக், 8 மாத குழந்தை ஒன்றின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவ, தனது பதக்கத்தை 1 லட்சத்து 25 ஆயிரம் டாலருக்கு ஏலம் விட்டுள்ளார்.

                                      ***************

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெறும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் பிரிவில் இந்தியாவின் ரோகன் காம்ப்ளே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

                                      ***************

இந்திய விமானப்படை விமா னங்கள் எதிரி ரேடார் கண்களில் படாமலிருக்க உதவும் தொழில்நுட்பத்தை, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது.

                                      ***************

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அந்நாட்டுக்கு வழங்க இருந்த ரூ.2750 கோடி நிதியை சர்வதேச நாணய நிதியம் நிறுத்தி வைத்தது.

                                      ***************

இந்தியாவில் முதல்முறையாக வியட்நாம் நாட்டின் துணைத் தூதரகம் பெங்களுரூவில் திறக்கப்பட்டுள்ளது.