india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

கொரோனா வைரஸ் தொற்றுபரவல் அச்சுறுத்தல் சர்வதேச விமான போக்குவரத்துக்கான  தடை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஒன்றிய விமா னப்போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

                                              ***************

மேகதாது செயல் திட்ட அறிக்கையை நிராகரிக்கக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஆகஸ்ட் 31 செவ்வாய்க்கிழமையன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது.  

                                              ***************

பாரத் பயோடெக் நிறுவனம் ஹைதராபாத்தை  தொடர்ந்து குஜராத்திலும் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கியுள்ளது. அங்லேஷ்வரில் அமைக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக் ஆலையில் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தொடங்கி வைத்தார்.

                                              ***************

உடற்பயிற்சி தொடர்பான ‘பிட் இன்டியா’ செல்போன் செயலியை ஒன்றிய  இளைஞர் நலன் -விளையாட்டுத்துறை அமைச்சர்  அனுராக் தாக்கூர் ஞாயிறன்று வெளியிட்டார்.

                                              ***************

நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் விகிதம் 97.53 சதவீதமாக உள்ளது என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

                                              ***************

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், 22.53 பில்லியன் டாலர் அளவிற்கு அந்நிய நேரடி முதலீடுகள் வரப்பெற்றுள்ளதாக ஒன்றிய வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.

                                              ***************

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வைத்திநாதன்(21) என்கிற உயிரியல் தொழில்நுட்ப இறுதியாண்டு மாணவர் முறிந்த எலும்புகளை 15 நாட்களுக்குள் ஒட்ட வைக்கும்ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி யடைந்துள்ளார்.