india

img

து.ராஜா நாடாளுமன்ற உரைகள் நூல் வெளியீடு....

புதுதில்லி:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா அவர்களின்தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள் மற்றும்சில நூல்கள் புதுதில்லியில் உள்ள கான்ஸ்டிட்யூசன் கிளப்பிவ் சனியன்று வெளியிடப்பட்டது. து.ராஜா நாடாளுமன்றத்தில்ஆற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள் ஆங்கிலத்தி லும், இந்தியிலும் வெளியிடப்பட்டன.இப்புத்தக வெளியீட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, திமுகவைச்சேர்ந்த திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், தி ஒயர் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், பம்பாய் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் பி.ஜி.கோல்சே பட்டீல் முதலானவர்கள் பங்கேற்றனர்.  இவ்விழாவில் பேசியவர்கள், து.ராஜா, விளிம்புநிலை மக்களுக்காகக் குரல் கொடுத்ததையும் அவர்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட முயற்சிகளையும் எடுத்துக்கூறினார்கள். து.ராஜா, பொருளாதாரம், மதச்சார்பின்மை, அரசமைப்புச் சட்டம், பாலின சமத்துவம், தலித் மற்றும் விளிம்புநிலை மக்களின் பிரச்சனைகள் குறித்துப் பேசியுள்ளதையெல்லாம் எடுத்துக்காட்டினார்கள்.து.ராஜாவின் உரைகளும், இந்தப் புத்தகத்தில் அவர் அளித்துள்ள நேர்காணலும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கும் உத்வேகம் ஊட்டக்கூடியவை என்றும், ஒரு நல்ல நாடாளுமன்றவாதி எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தரக் கூடிய விதத்தில் அமைந்திருக்கின்றன என்றும் கூறினார்கள்.(ந.நி.)