புதுதில்லி:
மேற்குவங்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த அக்டோபர்மாதம் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.அமித் ஷா கூறியது உண்மைஎனும் பட்சத்தில் அது நாட்டிற்கேஆபத்து என்பதுடன், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பொறுப்பானஒரு அமைச்சரே இவ்வாறு கூறியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை சமூக செயற்பாட்டாளர் சாகேத் கோகலே, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.
1. உள்துறை அமைச்சர் கூறுவதுபடி வெடிகுண்டு தயாரிக்கப்படும் இடங்களின் பட்டியல் இருக்கிறதா? 2. இது குறித்து உள்துறை அமைச்சகம், அமித்ஷா-விடம் விவரித்ததா? 3. அமித்ஷா கூறியது அரசிடம் உள்ள தகவலின் அடிப்படையிலா அல்லதுஅவராகவே கூறியதா? 4. சந்தேகத்திற்கிடமான இந்த வெடிகுண்டு தொழிற்சாலைகள் குறித்து மேற்குவங்க மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? - என்று நான்கு கேள்விகளை எழுப்பியிருந்தார். ஆனால், உள்துறை அமைச்சகம் கடந்த 6 மாதமாக எந்தப்பதிலும் அளிக்காமல் இழுத்தடித்து வந்தது. அண்மையில், இதனைக் குறிப்பிட்டு உள்துறை அமைச்சகத்தின் மீது வழக்கு தொடுக்க முடிவுசெய்த கோகலே, முன்னதாக முறைப்படி நோட் டீஸ் அனுப்பினார்.இதையடுத்து வழிக்குவந்த உள்துறை அமைச்சகம், தற்போது கோகலே-வின் கேள்விகள் அனைத்திற்கும் ஒற்றை வரியில் ‘இல்லை’ என்று பதிலளித்து ‘ஜகா’ வாங்கியுள்ளது. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது மாநிலத்தின் கடமை என்றும் இதுகுறித்து மாநில காவல்துறையிடம்தான் கேட்க வேண்டும் என்றும் தப் பிக்க முயன்றுள்ளது.அதாவது, அமித்ஷா கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவரது அமைச்சகமே ஒப்புக் கொண்டுள்ளது.