india

img

ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்... குல்காம் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தலைவராக முகமது அப்சல் (சிபிஎம்) தேர்வு

புதுதில்லி:
ஜம்மு-காஷ்மீரில் குல்காம் மாவட்டமேம்பாட்டு கவுன்சிலின் (டிடிசி) தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமது அப்சல் தேர்ந்தெடுக்கப் பட்டார். சபையின் 13 உறுப்பினர்களின் ஆதரவோடு அப்சல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிபிஎம் மாவட்டசெயலாளராக இருக்கும் அப்சல், பாம்பீவார்டில் இருந்து வென்றார்.

குப்கர் கூட்டணியின் ஒரு பகுதியாக சிபிஎம், தான் போட்டியிட்ட ஐந்து இடங்களையும் வென்றது.தேசிய மாநாட்டுக் கட்சியின் ஷாஜியா போஸ்வால் டிடிசி-யின்துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். தேசிய மாநாடு நகராட்சி மன்றத்தின் தலைவர் பதவியையும் வென்றது. சிபிஎம் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் குல்கம் எம்எல்ஏவுமான முகமது யூசுப் தரிகாமி வெற்றிபெற்றவர்களை வாழ்த்தினார்.ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துமற்றும் உரிமைகளை மீட்டெடுக்க முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டாக ஒருபிரகடனம் வெளியிட்டு மக்கள் கூட்டணியை அமைத்தன. குப்கர் கூட்டணியின் அமைப்பாளராக தாரிகாமி உள்ளார். முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட் டுக் கட்சித் தலைவருமான பரூக் அப் துல்லா தலைவராக உள்ளார். கடைசி நிமிடத்தில் கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், டிடிசி தேர்தலில் பெரும்பின்னடைவை சந்தித்தது.