india

img

20 குழந்தைகளை பெற்றால் ரேசன் பொருள் அதிகம் கிடைக்கும்.... உத்தரகண்ட் பாஜக முதல்வர் மீண்டும் வாய்த் திமிரான பேச்சு...

டேராடூன்:
ரேசனில் பொருட்கள் அதிகம் கிடைக்க வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் 20 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று வாய்த் திமிராக பேசி உத்தரகண்ட் பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

பாஜக ஆட்சி நடக்கும் உத்தரகண்டில், ஊழல் முறைகேடு, உட்கட்சிபூசல் காரணமாக அந்த மாநில முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பாஜக சார்பில் புதியமுதல்வராக தீரத் சிங் ராவத் கடந்த மார்ச் 10 அன்று பதவியேற்றுக் கொண்டார்.ஆனால், பதவியேற்ற நாள்முதலேஎதையாவது உளறிக் கொட்டுவது, சர்ச்சையைக் கிளப்புவது தீரத் சிங் ராவத்தின் வழக்கமாகி விட்டது.ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளா விழாவின்போது பேசிய தீரத்சிங் ராவத், “பகவான் ராமர், கிருஷ்ணரின் அவதாரம்தான் பிரதமர் நரேந்திர மோடி” என்றும், “மோடியை விரைவில் மக்கள் கடவுளாக ஏற்றுக் கொள்வார்கள்” என்று சர்ச்சையை ஆரம்பித்தார்.

இரண்டொரு நாட்களிலேயே, “பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து முழங்கால்களைக் காட்டுவதால்தான் சமூகம் சீர்கெட்டுப் போகிறது” என்று அடுத்த சர்ச்சையைக் கிளப்பினார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், கிழிந்த ஜீன்ஸ் அணிவோரை மட்டுமே, தான்விமர்சித்ததாக குறிப்பிட்ட தீரத் சிங்ராவத், ஜான்சி ராணி லட்சுமி பாய் போன்றோர் புடவை அணிந்து கொண்டுதான் போருக்குச் சென்றார் கள் என்று புதிய கதையையும் அவிழ்த்து விட்டார்.கடைசியாக, இந்தியாவை அமெரிக்கா 200 ஆண்டுகள் அடிமைப்படுத்தி வைத்திருந்ததாக பரபரப்பை ஏற் படுத்தினார். “200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தி, உலகம்முழுவதையும் ஆண்ட அமெரிக்காகூட, கொரோனா பாதிப்பிலிருந்து மீளப் போராடுகிறது; ஆனால், கொரோனாவிலிருந்து இந்தியாவை மோடி காப்பாற்றி விட்டார்” என்று அவர் பேசினார்.

கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் இந்தியாவுக்குள் நுழைந்த பிரிட்டிஷ் அரசு, கம்பெனி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து 1858 முதல் 1947 வரை இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. இந்த அடிப்படை வரலாறு கூட தெரியாமல் ராவத் உளறிக்கொட்டினார். தற்போது, ரேசன் பொருள் அதிகம்கேட்பவர்கள், 20 குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று வாய்த்திமிராகப் பேசியுள்ளார்.“இரண்டு மூன்று குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட சிலர், தங்களுக்கு மட்டும் குறைவான அளவுரேசன் கிடைப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அவர்களுக்கு இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள நேரம் இருக்கிறது என்றால்,ஏன் அவர்கள் 20 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடாது. ஏனென் றால், குடும்பத்தில் ஒருவருக்கு 5 கிலோரேசன் வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 10 பேர் இருந்தால் அவர்களுக்கு 50 கிலோ ரேசன் கிடைக்கும்,20 பேர் இருந்தால் 100 கிலோ ரேசன் கிடைக்கும்...” என்று வறுமையைக் கேலி செய்துள்ளார்.