புதுதில்லி:
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தின்போது, திரிணாமுல் எம்.பி. மஹூவா மொய்த்ரா தன்னை மூன்று முறை ‘பிகாரி குண்டா’ என்று அவமானப்படுத்தியதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே புலம்பியுள்ளார்.
‘பெகாசஸ்’ உளவு விவகாரம் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான நிலைக்குழு கூட்டம் புதனன்று கூட்டப்பட்டது. ஆனால், நாடாளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது, நிலைக்குழு கூட்டங்களை நடத்த விதிகள் அனுமதிக்கவில்லை என்று கூறி, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.இதனிடையே ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.நிஷிகாந்த் துபே அளித்த பேட்டியில், “தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் திரிணாமுல் எம்.பி.மஹூவா மொய்த்ரா, என்னைமூன்று முறை ‘பீகாரி குண்டா’(பீகாரில் சமூக விரோத செயல் களில் ஈடுபடும் குண்டர்களை ‘பீகாரி குண்டா’ என்பார்கள்) என்றுஅழைத்தார்” என்று குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
மொய்த்ராவின் பேச்சு, வட இந்தியர்கள் மற்றும் இந்தி பேசும் மக்கள் மீதான வெறுப்பையே வெளிப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.இதற்கு திரிணாமுல் எம்.பி. மஹூவா மொய்த்ரா டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில், “அவரது பெயரை (நிஷிகாந்த் துபே) அவரேகுறிப்பிட்டதை பார்த்து கொஞ்சம் சிரிப்பு வருகிறது. தகவல் மற்றும் தொழில்நுட்ப குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொள்ளாதநிலையில், அவரை நான் எப்படிபேசியிருக்க முடியும்? உறுப்பினர்களின் வருகை பதிவை அவர்சரிபார்க்கவும்” என தெரிவித்துள் ளார்.