india

img

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி....

புதுதில்லி:
60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் மார்ச் 1 ஆம் முதல் தொடங்குகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதில் நீரிழிவு நோய்கள், கடந்த ஓராண்டாக இதயக்கோளாறு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்ட 20 இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 16 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசியை இலவசமாகப் போட்டுக் கொள்ளலாம். தனியார் மருத்துவமனையில் ரூ.250 செலுத்தி  தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.கொரோனா தடுப்பூசி போடும் 60 வயதுக்குமேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். இணை நோய்கள் இருப்போர் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் ஒருவரிடம் தனக்கிருக்கும் இணை நோய்கள் குறித்த சான்றிதழ் பெற்றுவந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆரோக்கிய சேது, கோ-வின் ஆகிய செயலிகளில் முன்பதிவு செய்துகொண்டும் மக்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.