புதுதில்லி:
ஜே.இ.இ. தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த ஐ.ஐ.டி.களில் பட்டப்படிப்பில் சேர்வதற்காக ஆண்டு தோறும் மாணவர்களுக்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 2021 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு நான்கு முறை ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படும்என்றும் 13 மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான முதல் ஜே.இ.இ. தேர்வு பிப்ரவரி 23 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.