india

img

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகுவதாக அறிவிப்பு

தில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகப்போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் புதிய மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரிய கெஜ்ரிவால் மனுவை செப்.13 அன்று விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது. இதையடுத்து, அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று புதுதில்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுடன் பேசிய கெஜ்ரிவால், இன்னும் 2 நாள்களில் பதவி விலகவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் கூடி, ஆலோசித்து புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். துணை முதல்வராக உள்ள மணிஷ் சிசோடியாவும் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மக்களை நேரடியாகச் சென்று சந்திக்கவுள்ளதாகவும், தன்னை நேர்மையானவன் என மக்கள் சான்றளித்தபின் அடுத்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், அதன்பின் மீண்டும் முதல்வர் பதவியேற்றுக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.