புதுதில்லி/சென்னை:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வந்ததையடுத்து, ஊரடங்குகள் தளர்த்தப்பட்டது. இதனால் மக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதை மறந்துவழக்கம்போல் இருந்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த ஒருமாதமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு போன்றமாநிலங்களில் கடந்த ஒரு வாரமாககொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 33% அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி யுள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலம்நாக்பூரில் கடந்த 14 நாட்களில் தொற்றுஎண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் அங்கு ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி மார்ச் 17 (புதனன்று)அனைத்து மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.இந்த பேச்சுவார்த்தையில் மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எப்படி இருக்கிறது என்றும், ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துவது குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாநிலங்களில் கொரோனா பரவல் தடுப்பதை குறித்துப் பேசப்பட உள்ளது.
ஏற்கனவே கொரோனா வைரஸ்பரவியபோது திடீரென ஊரடங்குகளை அறிவித்து, மக்களை வாட்டி வதக்கியது மோடி தலைமையிலான பாஜக அரசு. தற்போது மீண்டும் கொரோனா பரவி வருவதாக பாஜக அரசு, ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்படுமோ என்றஅச்சத்தில் மக்கள் உள்ளனர்.
தமிழகத்தில்...
இதனிடையே 50 நாட்களுக்கு பின்னர், தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி புதிதாக கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை 800-க்கும் கீழ் குறையத் தொடங்கியது. தொடர்ந்து குறைந்து வந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அதன்படி சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
அவ்வகையில் 66 நாட்களுக்கு பின்னர் திங்களன்று மீண்டும் 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 நாட்களுக்கு பின்னர் கொரோனா சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் திங்களன்று ஒரே நாளில் 64 ஆயிரத்து 645 பேருக்குகொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 476 ஆண்கள், 360 பெண்கள் என மொத்தம் 836 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 317 பேரும் செங்கல்பட்டில் 81 பேரும் கோவையில் 70 பேரும் குறைந்தபட்சமாக அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, தென்காசி, இராமநாதபுரத்தில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்களன்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது.இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 38 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 165 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் பொது மக்கள், தனி மனித இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறினர்.