புதுதில்லி:
தனது காலடி பட்டால்தான் இந்தியாவில் கொரோனா தொற்று ஒழியும் என சாமியார் நித்தியானந்தா ‘அருள்வாக்கு’ கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.பாலியல் வல்லுறவு, ஆள் கடத்தல், சொத்து அபகரிப்பு உள்ளிட்டவழக்குகளில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்குத் தப்பினார்.
அவரை இந்திய விசாரணை அமைப்புகள் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றன என்று கூறப் பட்ட நிலையில், ‘கைலாசா’ என்றபுதிய நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் அதற்கு, தான்தான் அதிபர் என்றும்அறிவித்தார். அதன்பிறகு, பக்தி என்ற பெயரில், தனது சிஷ்யைகளுடன் கூத்தடிக்கும் புகைப்படங்கள், சிவன்,திருப்பதி வெங்கடேசப் பெருமாள் வேடங்களில் தோன்றும் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தாலும், அவர் அதை கண்டுகொள்வதாக இல்லை.
இந்நிலையில், புதிதாக அம்மன் வேடம் போட்ட வீடியோவையும் நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். அடர்ந்தபுருவம், கலர் லென்ஸ் சகிதமாக அம்மன் வேடத்தில் தோன்றும் நித்தியானந்தா, ‘இந்தியாவில் கொரோனாஎப்போது ஒழியும்?’ என்று ஒருவர் கேள்வியெழுப்ப, ‘அதற்கு என் உடலில் அம்மன் புகுந்துள்ளது; நான்காலடி எடுத்து வைத்தால்தான் கொரோனா இந்தியாவை விட்டு ஓடும்’ என்று அருள் வாக்கு தருகிறார்.இந்த வீடியோ சமூகவலைதளங் களில் காமெடியாக மாறியுள்ளது. ‘இன்னும் ஏன், தாமதம்..? உடனடியாக இந்தியா வாருங்கள்..’ என்று பலரும் அவருக்கு அழைப்பு விடுத்துவருகின்றனர். ‘உங்கள் மீது இருக்கும்வழக்குகள் பெரிதா? பல கோடி பக்தர்களின் உயிர் பெரிதா?’, ‘இன்னும்நீங்கள் ஓடி ஒளிவது சரிதானா? எங்கே, வந்து விடுங்கள் பார்க்கலாம்’ என்று கிண்டல் பதிவுகளை போட்டு வருகின்றனர்.நான் கைலாசாவில் என்னை தனிமைப்படுத்திக் கொண்ட போது அனைவரும் சிரித்தார்கள். ஆனால், அன்றுசிரித்தவர்கள் எல்லாம் இன்று இந்தியாவில் தங்களைத் தாங்களே தனிமைக் கொள்ள வேண்டிய நிலையைஆண்டவன் ஏற்படுத்தி விட்டான் என்றுகடந்தாண்டு கொரோனா முதல் அலையின்போது நித்தியானந்தா கேலி செய்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.