india

img

தொடரும் நிலக்கரி பற்றாக்குறை : தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் விரைவில் மின்தடை? 

தில்லி 
நாட்டில் நிலக்கரி கையிருப்பு மிகுந்த கவலையை ஏற்படுத்தி வருகிறது. அனல் மின்நிலையங்களில் போதுமான அளவே நிலக்கரி இருப்பதால் பெரும்பாலான மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் தரவு படி,"135 அனல் மின் நிலையங்களில்,115-இல் ஒரு வாரத்திற்கும் குறைவாகவே நிலக்கரி உள்ளது.இதில் 17 மின் நிலையங்களில் ஒரு நாளுக்கு கூட போதுமான கையிருப்பு இல்லை. 26 மின் நிலையங்களில் ஒரு நாளுக்கு மட்டுமே இருப்பு உள்ளது".

நிலக்கரி பற்றாக்குறையில் இதே நிலை நீடித்தால்  மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா,தில்லி, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விரைவில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது.ஆனால் ஒன்றிய அரசோ பொறுப்பில்லாமல் நிலக்கரி பற்றாக்குறை விவாகராத்தை பற்றி பெயரளவு ஆலோசனை நடத்திவிட்டு சமாளிக்கிறது.