india

img

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது.... ஜனாதிபதி உரையில் மோடி அரசு ஆணவம்....

புதுதில்லி:
புதிய வேளாண் சட்டங்கள் குறித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும் என்று வெள்ளியன்று துவங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில்  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 வெள்ளிக்கிழமையன்று  ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக்கூட்ட த்தில் ஜனாதிபதி உரையாற்றினார். வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்  தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்  ஜனவரி 26 அன்று விவசாயிகள் மீதான மத்திய அரசின் காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்தும் குடியரசுத் தலைவரின் உரையை  18 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. 

கூட்டத் தொடரில் ஜனாதிபதி பேசியதாவது: 

மத்திய, மாநில அரசுகள் இடையிலான ஒத்துழைப்பு, ஜனநாயகத்தை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது.  வேளாண் விளைபொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டத்தால் பலர் பயனடைந்துள்ளனர். ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் மூலம் 6 மாநில மக்கள் பயன் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மூன்றாம் பாலினத்தவ ருக்கு சம உரிமைகள் அளிப்பதற்காக, பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தூத்துக்குடி - இராமநாதபுரத்துக்கு எரிவாயு குழாய் அமைக்கும் பணி விரைவாக நடைபெறுகிறது.  புதிய 3 வேளாண் சட்டங்கள்  விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது 
விவசாயிகள் சமீபத்தில் நடத்திய டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைதுரதிர்ஷ்டவசமானது.   இந்தியாவில் 80 சதவீதம் சிறு விவசாயிகளே உள்ளனர். புதிய வேளாண் சட்டங்கள் மூலமாக சிறு குறு விவசாயிகள் பயன்பெறத் தொடங்கியுள்ளனர்.வேளாண் சட்டங்களை ரத்து செய்யப் போவதில்லை. விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கு உரிய விலையை பெறுவதை அரசு உறுதி ய்யும்.வேளாண் சட்டங்களை அனைவரும் மதிக்க வேண்டும்.கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடிரூபாய் நிவாரணமாக கொடுத்துள் ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பிப்.1 வரை மக்களவை ஒத்திவைப்பு
ஜனாதிபதி உரைக்கு பிறகு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற அமர்வில், 2020- 21 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்தார்.அப்போது 3 வேளாண் சட்டங்களைரத்து செய்யக்கோரி  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 

உரையும் உண்மையும்
கொரோனா சூழலில் நாடாளுமன்றம் கூடியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.கொரோனா தடுப்பூசியில் இந்தியா முன்னிலையில் இருப்பதை உலகமே பாராட்டுகிறது; இந்தியாவில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. கொரோனா சூழலிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்தது. கொரோனா காலத்தில் இந்தியாவில் ஒருவர் கூட பசியால் தவிக்கவிடப்படவில்லை என்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.ஆனால் உண்மை இதற்கு மாறாகஉள்ளது என்று மக்கள் மற்றும்அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்ற னர். எந்தவொரு முன்னேற்பாடும் செய்யப்படாமல் கொரோனா பரவல்தடுப்பு ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டு, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் வேலை செய்த வடமாநிலத் தொழிலாளர்களும் வடமாநிலங்களில் பல்வேறு நகரங்களில் வேலைசெய்துகொண்டிருந்த தொழிலாளர்களும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதியை மத்திய,மாநில அரசுகள் செய்துகொடுக்கவில்லை. தொழிலாளர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் பசியுடன் பல நூறு கிலோமீட்டர் நடந்தே சென்ற அவலம் நிகழ்ந்தது. குழந்தைகள் கால்களில் செருப்பு கூடஇல்லாமல் பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை கட்டிக்கொண்டு பசியுடன் நடந்துசென்ற கொடுமை இந்த பாஜக மோடி ஆட்சியில்தான் நடந்தது. இதனை தனியார் தொலைக்காட்சி செய்தி சேனல்கள் பதிவு செய்துள்ளன. ஆனால் தொழிலாளர்கள் அவசரப்பட்டு நடந்துசென்றுவிட்டனர் என்று சில மாதம் கழித்து மத்திய அரசுஅலட்சியமாக கூறியது. கொரோனா கால அவலங்கள் இவ்வாறு இருக்க,மத்திய அரசோ ஜனாதிபதி உரையில் கொஞ்சம் கூட வெட்கம்இல்லாமல் பொய்களை அள்ளி வீசியுள்ளது என்று கடுமையாகச் சாடியுள்ளனர்.

 2020-21ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7சதவீதமாக சுருங்கும். 

இந்த நிதியாண்டின் சரிபாதி காலத்தை கொரோனா ஊரடங்கு பாதித்ததால்தான் இந்த நிலை.

2021-22ல் இந்திய பொருளாதாரம் 11 சதவீதமாக அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை ஆரூடம் கூறுகிறது.