புதுதில்லி:
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் வகையில் ‘2-டிஜி’ (டியோக்ஸி டி குளுக்கோஸ்) என்ற புதிய கொரோனா தடுப்பு மருந்தைமத்திய பாதுகாப்புத்துறையின் பாதுகாப்பு ஆராய்ச்சி - மேம்பாட்டு அமைப்பு மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து கண்டுபிடித்தது. இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மருந்தை மக்கள் பயன்பாட்டிற்காக மே 17 ஆம் தேதி மத்திய அரசு அறிமுகம் செய்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட முடியாமல் ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் இம்மருந்தை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து 990 ரூபாய்க்கு கிடைக்கும் என்றும் அரசு மருத்துவமனைகள், மத்திய மாநிலஅரசுகளுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.