புதுதில்லி:
சிரியா அரசின் கோரிக்கையை ஏற்று சுமார் 2 ஆயிரம் மெட்ரிக் டன் மதிப்புள்ளஅரிசி மூட்டைகள் பரிசாக அனுப்பப்பட்டது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் கூறுகையில், “ உணவு பாதுகாப்புக்காக சிரியாஅரசின் கோரிக்கையை ஏற்று அவசர உதவிக்காக சுமார் 2 ஆயிரம் மெட்ரிக்டன் அரிசி மூட்டைகளை இந்தியா பரிசாக அனுப்பியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளும், அமெரிக்க ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் என்ற ஒரு கும்பலும் ஜனாதிபதி ஆசாத் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு அரசின் வேண்டுகோளை ஏற்று இந்தியா சுமார் 2 ஆயிரம் மெட்ரிக் டன் மதிப்புள்ளஅரிசி மூட்டைகள் அனுப்பியுள்ளது.