ஐதராபாத் அருகே ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள், மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட கோர விபத்தில், 292 பேர் உயிரிழந்தனர். ஆயிரம் கணக்கானோர் படுகாயமடைந்தனர். இதை தொடர்ந்து, ஐதராபாத் அருகே ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹவுராவில் இருந்து செகந்திராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்துள்ளது. ஐதராபாத் அருகே ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் கீழே இறங்கி விடப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.