india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரளாவில் வயநாடு, காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஹேமா குழு அறிக்கையில் இடம்பெற் றுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். 

“நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை; இங்கே தான் இருக்கிறேன். அம்மா திரைப்பட நடி கர்கள் சங்கத்துக்காக பல நல்ல பணிகளை செய்துள்ளோம். நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்ற முறையில் ஹேமா கமிட்டியிடம் எனது வாக்கு மூலத்தை அளித்துள்ளேன். குற்றவாளிகள் கண்டிப் பாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், அதுவே காவல்துறையின் கடமை” என நடிகரும், கேரள நடிகர் சங்கத்தின் (அம்மா) முன்னாள் தலைவரு மான மோகன் லால் கூறியுள்ளார். 

ஹிஸ்புல் தஹிரிர் அமைப்புக்கு ஆள் சேர்த்த  புகாரில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப் பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப் பட்டார். வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற அஜீஸ்  அகமதுவை பெங்களூரு சர்வதேச விமானநிலை யத்தில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பதாகைகள் ஏந்தி பெங்களூரில்  பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

“பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளில் எவ்வளவு விரைவாக முடிவுகள் எடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு பாதுகாப்பிற்கான உத்தரவாதம் கிடைக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் பெண்கள் தங்கியுள்ள விடுதியின் கழி வறையில் இருந்து ரகசிய கேமரா கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவிகள் சிலர் கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்ப வத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தில்லி - அஜ்மீர் விரைவு சாலை பாலத்தில் அதி வேகமாக வந்த லாரி ஒன்று 200 அடி பைபாஸில் இருந்து பறந்து வந்து கீழே சென்று கொண்டிருந்த தண்ணீர் டேங்கர் லாரி மீது விழுந்து விபத்துக் குள்ளானது.

விஜயவாடா

ஆந்திராவுக்கு ரெட் அலர்ட்

வடக்கு ஆந்திர கடற்கரையை ஒட்டிய மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா வில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சனியன்று வலுவடைந்துள் ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து  திங்களன்று காலைக்குள்  கலிங்கப்பட்டி னத்திற்கு அருகில், விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூருக்கு இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ள நிலையில், “ தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் பெய்து வரும் கன மழை, அடுத்த 24 மணிநேரத்தில் ரெட்  அலர்ட் எச்சரிக்கையுடன் அதீத அளவிலான கனமழையாக தொடரும்” என இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். ஸ்டெல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.