india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் பனிப்பொழிவிற்கு நிகராக முன் கூட்டியே குளிர்காலம் துவங்கியுள்ளது. அடுத்த ஒரே வாரத்தில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறையும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி எச்சரிக்கை யும் விடுத்துள்ளார். 

பிரயாக்ராஜில் அடுத்தாண்டு ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை மகா கும்ப மேளா நடைபெறுகிறது. பிரயாக்ராஜின் மகா கும்ப மேளா பகுதியை புதிய மாவட்டமாக அறிவித்துள்ளது உத்தரப்பிரதேச பாஜக அரசு.

“12ஆவது பெயில்” திரைப்படம் மூலம் பிரபல மான இந்தி நடிகர் விக்ராந்த் மாஸி, திரைத்துறை யில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இத்திரைப்படம் பாஜக ஆளும் மாநிலங்களின் மோச மான கல்வி நிலைமையை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

6 அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் திங்க ளன்று சரிவுடன் முடிவடைந்தன. அதானி டோட்டல் கேஸ் பங்கு மும்பை பங்குச்சந்தையில் 4.87 சதவீதமும் சரிந்து ரூ.772 ஆகவும், அதானி எனர்ஜி சொல்யூ ஷன்ஸ் 4.04 சதவீதமும் சரிந்து ரூ.806.60 ஆகவும் இருந்தது. அதே போல என்டிடிவி பங்குகள் 1.29 சதவீத மும், அதானி வில்மர் 1.23 சதவீதமும், அதானி பவர் 1 சதவீதமும், அதானி எண்டர்பிரைசஸ் 0.28 சதவீத மும் சரிந்தன.