india

img

பாஜகவின் பாசிச ஆட்சிக்கு மக்கள் அளித்த பதிலடி

புதுதில்லி, ஜுன் 5- பாஜக தங்களை ஆளக்கூடாது என்று மக்கள் அளித்துள்ள தீர்ப்பினை நடைமுறைப்படுத்து வதற்கு பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவுகளை மேற்கொள்வோம் என்று இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது.

18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலை யில், அடுத்து எத்தகைய அரசியல் நகர்வுகளை மேற்கொள்வது என்பது குறித்து இந்தியா கூட்டணி யின் ஆலோசனைக் கூட்டம் ஜுன்  5 புதனன்று புதுதில்லியில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், திமுக தலைவரும் தமிழக முத லமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  பொதுச் செயலாளர் து.ராஜா,  சிபிஐ (எம்எல்) பொதுச் செய லாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், ஆர்ஜேடி தலைவர்  தேஜஸ்வி, விசிக தலைவர்கள் தொல்.திருமாவளவன், டி.ரவிக்குமார், மமக தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா, கொமதேக தலைவர் இ.ஆர்.ஈஸ்வரன் உள்பட 33 தலைவர்கள் பங்கேற்றனர்.

விரிவான ஆலோசனை களுக்குப் பிறகு, இரவு 8.45 மணி யளவில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும், நாடு முழுவதும் உள்ள மக்கள் அளித்துள்ள மகத்தான தீர்ப்புக்கும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பு க்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்களின் தீர்ப்பு என்பது, பாஜக அரசின் மதவெறி, வெறுப்பு  அரசியலுக்கும் ஊழல் முடைநாற்ற மெடுத்த ஆட்சி நிர்வாகத்திற்கும் கிடைத்துள்ள சரியான பதிலடி ஆகும்.

இந்த தீர்ப்பு இந்திய அரசி யலமைப்புச் சட்டத்தை பாதுகாப்ப தற்காக மக்கள் அளித்துள்ள தீர்ப்பா கும். அதேபோல ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும்; இந்த ஆட்சி யில் மக்கள் மீது கடுமையான தாக்கு தலாக எழுந்துள்ள வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும், இவர்களது கூட்டுக்களவாணி முதலாளித்துவ நடவடிக்கைகளுக்கும் எதிராக மக்கள் அளித்துள்ள தீர்ப்பாகும். 

இந்தியா கூட்டணி, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக வின் பாசிச ஆட்சிக்கு எதிரான தனது தீரமிக்க போராட்டத்தை தொடர்ந்து உறுதியோடு முன்னெடுத்துச் செல்லும். 

பாஜக அரசு தங்களை ஆளக்கூடாது என்ற மக்களின் விருப்பத்தை பிரதிபலித்துள்ள தேர்தல் தீர்ப்பினை நடைமுறைப் படுத்துவதற்கு பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவு களை நாங்கள் மேற்கொள்வோம்.

தொடர்ந்து நாங்கள் அனை வரும் ஒன்றுபட்டு உறுதியோடு செயல்படுவோம். மக்களுக்கு நாங்கள் அளித்துள்ள வாக்குறுதி கள் அனைத்தையும் நிறைவேற்று வதற்கான முறையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள் வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

;