india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

பழனி முருகன் கோவிலில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல், 50 சதவீத பயணிகளுடன் மீண்டும் மின் இழுவை ரயிலை இயக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

                         *******************

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சென்னை-விஜயவாடா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

                         *******************

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 2 ஆம் தேதி தென்தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. 

                         *******************

‘உலக வழக்கழிந்த’ சமஸ்கிருத மொழியிலான செய்தி அறிக்கையை தமிழ் பேசும் மக்களிடமும், பிற மொழி பேசும் மக்களிடமும் திட்டமிட்டுத் திணிப்பது பகிரங்கப் பண்பாட்டுப் படையெடுப்பாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

                         *******************

இன்னும் சில மாதங்களில் நாட்டின் அனைத்து ரயில்நிலையங்களிலும் மண்குவளை களில் தேநீர் விற்பனை செய்யப்படும் என்று ராஜஸ்தான் திகாவாரா ரயில் நிலைய நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

                         *******************

மத்திய அமலாக்கப் பிரிவு இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கிய மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் காமன் காஸ் எனும் அமைப்பின்  சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. 

                         *******************

புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரியை ரத்து செய்ய முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த வரி ரத்து குறித்த கோப்பு துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

                         *******************

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்திலும் தோல்வியடைந்த இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

                         *******************

‘புலிகளின் மாநிலம்’ என்றழை க்கப்படும் மத்தியப் பிரதேசத்தில் 2020-ஆம் ஆண்டில் இதுவரை 26 புலிகள் இறந்துள்ளதாக அம்மாநில வனத்துறை தெரிவித்துள்ளது.

                         *******************

ஆப்கானிஸ்தானில் கிழக்கு கஸ்னி மாகாணத்தில் உள்ள ராணுவத் தளத்தில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 34 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

                         *******************

தாய்லாந்தில் ராணுவப் புரட்சி ஏற்படலாம் என்று அந்தநாட்டில் ஜனநாயக சீா்திருத்தங் களை வலியுறுத்திப் போராடி வரும்குழுவினா் அச்சம் தெரிவித்துள்ளனர்.

                         *******************

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 4 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். 

                         *******************

மயிலாடுதுறை ரயில்நிலையத் திலிருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரவைக்கு ஓசூருக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

                         *******************

தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிர்வாகப்பணிகளை கவனிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில்9 இணை ஆணையர் பணியிடங்களை உருவாக்கி அறநிலையத்துறை செயலாளர் விக்ரம் கபூர் உத்தர விட்டுள்ளார்.

;