india

img

காவியாக மாறும் மூவண்ணக்கொடி... காங்கிரசுக்கு எரிச்சலூட்டும் சசி தரூரின் ட்வீட்.....

புதுதில்லி:
நாடு வேகமாக காவியாக மாறி வருகிறதுஎன்று கூறும்  நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் படம் ட்வீட்டரில் வைரலாகியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் தற்போதைய விவகாரங்களை சித்தரிக்கும் வகையில் வெளியிட்டுள்ள தரூரின் ட்வீட் காங்கிரசாரின் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

மும்பையைச் சேர்ந்த கலைஞர் அபிநவ் கபாரஸின் படத்தை வார்த்தைகளை விட சக்தி வாய்ந்தது என்ற தலைப்பில் செவ்வாயன்று, தரூர் ட்வீட் செய்துள்ளார். இப்படம்,மூவண்ணக்கொடியை வடிகட்டும்போது காவியாக மாறுவதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது.பாஜகவாக வேகமாக மாறிவரும் காங்கிரஸ் கட்சி குறித்து தரூர் பேசுகிறார் என்பதே ட்வீட்டரில் கிடைத்துள்ள பதில். காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதிய குழுவில் தரூரும் ஒருவர். கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தொடர்ந்து தலைமையை விமர்சித்து வரும் சூழ்நிலையில், தரூரின் ட்வீட்டுகளில் எதிர்ப்பின் சூட்டை பார்வை யாளர்கள் உணர்ந்து வருகின்றனர்.

;