“சிஏஏ சட்டம் குறித்து முதலமைச்சர் தனக்குரிய அதிகாரத்தோடு சொல்லி இருக்கிறார். அண்ணாமலை அவருக்குரிய இடத்தின் தன்மையோடு பேசி இருக்கிறார். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசுக்கு அதிகாரங்கள் உள்ளன. மாநில அரசிற்கும் சில அதிகாரங்கள் உள்ளன. பெரும்பாலானவற்றை நடைமுறைப்படுத்துகிற அதிகாரங்களை மாநில அரசுக்குத் தான் வந்து சேரும். எனவே சட்டம் இயற்றலாமே தவிர எப்படி நடைமுறைப்படுத்துவது என்கிற அதிகாரம், மாநில அரசுக்கு உண்டு” என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார்.