india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சென்னை
ஜக்டோ-ஜியோ போராட்டம் திரும்பப் பெறப்பட்டது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய நிலை யில் ஜாக்டோ-ஜியோ அமைப்பி     னரின் போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்  படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்களின் கூட்டமைப் பான ஜாக்டோ - ஜியோ சார்பில் பிப்.15 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்,  தொடர்ந்து பிப்.26 முதல்  காலவரையற்ற வேலைநிறுத்த போராட் டம் நடத்தப்படும் என ஜாக்டோ - ஜியோ அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ  நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை புதனன்று நேரில் சந்தித்தனர்.  அப்போது தங்கள் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்த னர்.  அதைத் தொடர்ந்து போராட்ட அறி விப்பு வாபஸ் பெறப்பட்டது என ஜாக்டோ  ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

புதுதில்லி
விவசாயிகள் போராட்டத்தில் ராகுல்காந்தி

ஒன்றிய மோடி அரசிற்கு எதிராக விவசாயிகள் தில்லியில் போராடு வதற்காக எல்லையில் குவிந் துள்ள நிலையில், விவசாயிகளின் போராட்  டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவ ரும், எம்பியுமான ராகுல் காந்தி இணைந்து  கொண்டார். விவசாயிகளின் போராட்டத் தில் கலந்து கொள்வதற்காக ஜார்க்கண்  டில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை  நீதி யாத்திரையை ராகுல் காந்தி தற்காலி கமாக ரத்து செய்துள்ளார்.

புதுதில்லி
6-ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன்

“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜேஎம்எம் கட்சித் தலைவரும், ஜார்க்கண்ட் முன்  னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்  பட்டுள்ள நிலையில், அடுத்ததாக ஆம் ஆத்மி தலைவரும், தில்லி முதல்வருமான கெஜ்ரிவாலையும் கைது செய்ய  அமலாக்கத்துறை தீவிரமாக களமிறங்கி யுள்ளது.

தில்லி கலால் கொள்கை வழக்கில் தொடர்பு உள்ளதாக அமலாக்கத்துறை கடந்த 5 முறை சம்மன் அனுப்பி இருந்த  நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாமல் சம்மன் அனுப்பப்படுகிறது என கெஜ்ரிவால் சம்மன்களை புறக்கணித்தார். இதனால் அமலாக்கத்துறை தில்லி நீதி மன்றத்திற்கு ஓட்டம் பிடித்து வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக பிப்.  17-ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க  வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு உத்தர விட்டிருந்தது தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம்.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரி வாலுக்கு அமலாக்கத்துறை புதனன்று 6-ஆவது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.