india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வாரணாசி
மோடிக்கு எதிராக போட்டியிட முயன்றவரின் வேட்புமனு நிராகரிப்பு

பிரதமர் மோடிக்கு எதிராக வார ணாசி நாடாளுமன்றத் தொகுதி யில் போட்டியிட மனு செய்திருந்த  நகை கலைஞர் ஷியாம் ரங்கீலாவின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிரா கரித்துள்ளது. அவரது வேட்புமனுவில் முறையான விபரங்கள் இல்லை என்று  சொத்தையான காரணங்களை குறிப்பிட்டு  தேர்தல் அதிகாரி, மனுவை நிராகரித்துள்  ளார். இது நியாயமற்றது என்று ஷியாம்  ரங்கீலா குறிப்பிட்டு கண்டனம் தெரி வித்துள்ளார். தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒருவர், தேர்தல் அதிகாரி முன்பு  உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்  என்பது விதியாகும். அதை ஷியாம்  ரங்கீலா முறையாக செய்யவில்லை என் றும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளதாக  ஷியாம் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அத்த கைய உறுதிமொழியை மிக சரியாக தான் எடுத்துக் கொண்டதாகவும் சுட்டிக்  காட்டியுள்ளார். “எனது மனு மட்டுமல்ல,  அநேகமாக மோடிக்கு எதிராக போட்டி யிட விரும்பிய அனைவரது வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டிருக்கக் கூடும்” என்று ஷியாம் ரங்கீலா சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மும்பை
மோடி வருகையால் நெருக்கடி

மும்பையில் வெள்ளியன்று சிவாஜி பூங்காவில் ஜாகீர் சபா எனும் நிகழ்ச்சி மாநில முதல மைச்சர் ஏக் நாத் ஷிண்டே ஏற்பாட்டில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக வியா ழன்றே, மும்பை காவல்துறை கடுமை யான போக்குவரத்து விதிகளை அம லாக்கியுள்ளது. இதன்காரணமாக, மும்பை மாநகரில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

லக்னோ
5-ம் கட்டத் தேர்தல்: உ.பி. தொகுதிகளில் 5 விஐபி வேட்பாளர்கள்

மக்களவைக்கான ஐந்தாம் கட்டத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 14 தொகுதிகளில் மே 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், ரேபரேலியில் ராகுல் காந்தி,  லக்னோவில் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 5  முக்கிய வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80  மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்  றில் ஏழுகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதுவரையும் 41 தொகுதிகளில் நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஐந் தாம் கட்டமாக மே 20-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில், கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த  14-ல் கடந்த 2019 தேர்தலில் பாஜக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெற்றிபெற்ற ரேபரேலியையும் இந்த முறை பாஜக கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.

ரேபரேலியில் இந்தமுறை காங்கிர ஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி  போட்டியிடுகிறார்.

உ.பி.யின் ஐந்தாம்கட்ட 14 தொகுதி களும் ராமர் கோயில் அமைந்த அயோத்தி யை சுற்றி அமைந்துள்ளன. எனவே, இது வரையும் பெறாத ராமர் கோயில் பலனை  பாஜக இந்த தொகுதிகளில் பெற்று விட லாம் என்ற முனைப்புடன் உள்ளது.

உ.பி.,யின் 14 தொகுதிகளில் அயோத்தி இடம்பெற்ற பைஸாபாத், ரேப ரேலி, அமேதி, லக்னோ மற்றும் கைஸர்  கன்ச் ஆகிய ஐந்திலும் முக்கிய வேட்பா ளர்கள் போட்டியிடுகின்றனர். இவை அனைத்திலும் பாஜக பிரச்சாரம் செய்வ தில் தீவிரம் காட்டுகிறது.

கடந்த 2004 முதல் அமேதியில் எம்பி யாக இருந்த ராகுல் காந்தி, 2019ல் மத்திய  அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியுற்றார். இந்த முறையும் அவர்  அமேதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், காந்தி குடும்பத்துக்கு நெருக்கமாக பணியாற்றி வந்த  கிஷோரி லால் சர்மா காங்கிரஸுக்கா கப் போட்டியிடுகிறார். இவருக்காக  காங்கிரஸின் தேசியப் பொதுச்செயலா ளர் பிரியங்கா வத்ரா, பிரச்சாரத்துக்கு தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.

தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவும் அமேதியில் பிரச்சாரம் செய்  ததை அடுத்து, ராகுல் காந்தியும் வரு வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இத னால், பிரதமர் மோடியும் பாஜக வெற்  றிக்காக அமேதியில் பிரச்சாரம் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. 

ரேபரேலியில் சோனியா, 2009 தேர்த லில் 74 சதவீதம் வாக்குகள் பெற்றி ருந்தார். இது, 2014 இல் 64 சதவிகிதமாகக் குறைந்தது. பிறகு 2019-ல் மேலும் குறைந்து 56 சதவீதமானது. எனவே,  சோனியாவுக்கு 2019-ல் கிடைத்ததை விட  அதிகமான வாக்குகளுடன் வெல்ல ராகுல் தீவிரம் காட்டுகிறார். தம் மக னுக்காக சோனியாவும் ரேபரேலியின் பிரச்சாரம் செய்ய வருவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

உபியின் தலைநகரான லக்னோவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத்சிங் போட்டியிடுகிறார். இங்கு தொடர்ந்து இரண்டுமுறை எம்பியாக இருப்பவருக்காக பாஜகவின் பல முக்கி யத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வரு கின்றனர்.

ஐந்தாவது முக்கிய தொகுதியாக கைஸர்கன்ச் அமைந்துள்ளது. இது முக்கிய தொகுதியாக அமைய காரணம்  2009 முதல் அதன் பாஜக எம்பியான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீதான சமீ பத்திய புகார்தான். தேசிய குத்துச் சண்டை விளையாட்டு சங்கத்தின் தலை வராக இருந்தவர் மீது சில வீராங்கனை கள் பாலியல் புகார் எழுப்பியிருந்தனர். இவர்கள் தொடர்ந்து நடத்திய போரா ட்டத்தால் பாஜக எம்பியான பிரிஜ் பூஷண்  மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. இத னால், அவரது மகனான கரண் பூஷண்  சிங்கை இந்தமுறை பாஜக வேட்பா ளராக்கி விட்டது.

இந்த ஐந்து முக்கிய தொகுதிகள் உள்ளிட்ட 14-லும் உ.பி.,யின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமா ஜும் போட்டியில் உள்ளது. இதன் வேட்  பாளர்கள் பாஜகவுக்கு சாதகமாக சமாஜ்  வாதி மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் வாக்குகளை பிரிப்பர் எனக் கருதப் படுகிறது.

;