india

img

‘பிரதமர் மோடி கோவில் கருவறைக்குள் நுழையக்கூடாது’

அயோத்தியில் கட்டி முடிக்கப்படாமல் இருக் கும் ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22-ஆம்  தேதி நடைபெற உள்ள நிலை யில், இந்த ராமர் கோவில் பிர திஷ்டையை  முன்னிட்டு பிரத மர் மோடி நாட்டின் பல்வேறு பகு திகளுக்கு சென்று கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்.

அதன்  ஒருபகுதியாக ஜனவரி 21-ஆம் தேதி தமிழ்நாட்டின் ஶ்ரீரங்கம், இராமேஸ்வரம் கோவில்களில் மோடி தரிசனம் செய்ய உள்ள  நிலையில், ஶ்ரீரங்கம் கோயில் கரு வறைக்குள் பிரதமர்  மோடியை அனுமதிப்பது ஆகமத்துக்கு எதி ரானது என கோவில்கள் தொடர்  பாக பொதுநல வழக்கு தொட ரும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மூத்த அர்ச்சகர் ரங்கராஜன் நர சிம்மன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர், “ஸ்ரீரங்கம் கோவில் கருவறைக்குள் யாரும்  நுழைந்துவிட முடியாது. சாமி  சிலைக்கு மலர்கள் உள்ளிட்டவை களால் நேரடியாக பூஜை செய்ய முடியாது.

கருவறைக்குள் போவது, சிலைக்கு பூஜை செய்  வது அர்ச்சகர்கள்தான். அர்ச்ச கர்கள்தான் ஆரத்தி காட்ட வேண்  டும்.  இவற்றை எல்லாம் தமிழ்நாடு  ஆளுநர் ஆர்.என்.ரவியும், தமிழ்  நாடு பாஜக தலைவர் அண்ணா மலையும் பிரதமர் மோடி ஶ்ரீரங்கம் வருவதற்கு முன்னதாக அவரின்  கவனத்துக்கு கொண்டு செல்ல  வேண்டும்” எனக் கூறி பிரதமர்  மோடியை கோவில் கருவறைக் குள் நுழையக்கூடாது என எதிர்ப்பு  தெரிவித்துள்ளார். ரங்கராஜன்  நரசிம்மனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் டாப் ஆர்ட ரில் வைரலாகி வருகிறது.