india

img

மகாயுதி கூட்டணியில் ஓரம்கட்டப்பட்ட சிவசேனா

மும்பை சமீபத்தில் நிறைவு பெற்ற மகா ராஷ்டிரா சட்டமன்ற தேர்த லில் பாஜக – சிவசேனா (ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் (அஜித்) ஆகிய கட்சிகளின் “மகா யுதி” கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி யை கைப்பற்றியது. இதனால் சிவ சேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே  மீண்டும் முதல்வராக தேர்வு செய் யப்படுவார் என எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மிரட்ட லுக்கு அடிபணிந்த ஏக்நாத் ஷிண்டே, முதல்வர் பதவியை பாஜகவிற்கு விட்டுக்கொடுத்தார். இதனையடுத்து பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார்  துணை முதல்வர்களா கவும் டிசம்பர் 5ஆம் தேதி பதவி யேற்றனர். தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி மகாராஷ்டிரா வர லாற்றில் இதுவரை இல்லாத வகை யில் 39 பேர் அமைச்சர்களாக பதவி யேற்றனர்.

மீண்டும் மோதல்

தொகுதி ஒதுக்கீடு, முதல்வர் பதவி தொடர்பாக மோதல் நீடித்தது போல இலாகா ஒதுக்கீட்டிலும் பாஜக – சிவசேனா (ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் (அஜித்) 3 கட்சிகளும்,”எங்களுக்கு இந்த இலாகா வேண்டும்” என கூட்ட ணிக்குள் யுத்தத்தை தொடங்கின.

குறிப்பாக ஏக்நாத் ஷிண்டே, “முதல்வர் பதவியை விட்டுக்கொ டுத்ததால், கண்டிப்பாக உள்துறை இலாகா வேண்டும்” என நெருக் கடி கொடுத்தார். அதே போல அஜித் பவார்,”நான் மீண்டும் இரண்டாம் நிலை துணை முதல்வராக இருப்ப தால் வழக்கம் போல எனக்கு நிதி யமைச்சர் இலாகா வேண்டும்” என அடம் பிடித்தார். இதற்கிடையில் பாஜகவினர், “ஷிண்டேவுக்கு உள்துறையும், அஜித் பவாருக்கு நிதியமைச்சர் பதவி கொடுத்தால் போராட்டம் நடத்துவோம்” என அறிவித்து போஸ்டர் யுத்தத்தில் களமிறங்கினர்.இதனால் மகா ராஷ்டிராவின் மகாயுதி கூட்டணி அரசு நாட்டின் “காமெடி கூட்டணி” என்ற பெயரை பெற்றது.

டம்மியாக்கப்பட்ட ஷிண்டே

சனிக்கிழமை அன்று மகாயுதி கூட்டணி அரசின் இலாகாக்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்துறையை  (துணை முதல்வ ராக இருந்த போதும் இதே துறை யை கவனித்தார்) தன்னிடமே வைத்துக் கொண்டார். மேலும் எரி சக்தி, சட்டம் மற்றும் நீதிமன்றம், பொது நிர்வாகம், தகவல் மற்றும் விளம்பரம் உள்ளிட்ட மிக மிக முக்கிய துறைகளை சுருட்டிக் கொண்டார். 

அதே போல துணை முதல்வ ராக பதவியேற்ற அஜித் பவாரு க்கு, ஏற்கெனவே வகித்த நிதித் துறை மற்றும் திட்டம், மாநில கலால் துறை என 3 இலாகா ஒதுக் கப்பட்டன.

முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர்ப்புற மேம் பாடு, வீட்டுவசதி மற்றும் பொதுப் பணித்துறை ஆகிய 3 அமைச்ச கங்கள் ஒதுக்கப்பட்டன. ஷிண்டே வுக்கு சாதாரண இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே போல பாஜகவைச் சேர்ந்த மற்ற அமைச்சர்களுக்கு வருவாய், நீர் வளங்கள், உயர் நிலை மற்றும் தொழில்நுட்ப கல்வி, சட்டமன்ற விவகாரங்கள், வனம், சுற்றுப்புறச்சூழல், பிற்படுத் தப்பட்டோர் நலன் உள்ளிட்ட முக்கிய துறைகள் ஒதுக்கப் பட்டுள்ளன. சிவசேனாவை (ஷிண்டே) சேர்ந்த அமைச்சர்க ளுக்கு பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலன், குடிநீர் விநியோகம் மற்றும் துப்புரவு, தொழிற்சாலை மற்றும் சமூக நீதி உள்ளிட்ட துறை களும், தேசியவாத காங்கிரஸைச் (அஜித்) சேர்ந்த அமைச்சர்களுக்கு வேளாண்மை, மருத்துவக் கல்வி,  உணவு மற்றும் பொது விநியோ கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாடு உள்ளிட்ட துறைக ளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கெடு

இந்நிலையில், “டம்மி” இலா காக்களை தங்கள் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஒதுக்கியதாக கூறி சிவசேனா தலைவர்கள், தொண்டர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முதல்வர் பதவியில் இருந்து இறக்கியதே மிகப்பெரிய  அவமானம் ; இலா கா ஒதுக்கீட்டிலும் டம்மியாக் கப்பட்டது அதை விட பெரும் அவ மானம் எனக் கூறி மகாயுதி கூட்ட ணியில் இருந்து உடனடியாக வெளி யேற வேண்டும் என சிவசேனா தலை வர்கள், தொண்டர்கள் ஏக்நாத் ஷிண் டேவுக்கு கெடு விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.