india

img

பாஜக ஐடி பிரிவு தேசிய தலைவர் மீது பாலியல் புகார்!

பாஜகவின் ஐடி பிரிவு தேசிய தலைவர் அமித் மாளவியா மீது ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் சாந்தனு சின்ஹா பாலியல் புகார் தெரிவித்துள்ளார். 
நாடாளுமன்ற தேர்தலின்போது மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பணி மேற்பார்வையாளராக இருந்த அமித் மாளவியா, பல பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் சாந்தனு சின்ஹா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அமித் மால்வியா மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்து உள்ளது.
இந்த பாலியல் குற்றசாட்டுகளை மறுத்துள்ள அமித் மாளவியா, சாந்தனு சின்ஹா மீது ரூ.10 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.