india

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள் முதலிடம்

புதுதில்லி, ஆக. 22 - பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு களில் தொடர்புடைய சட்டமன்ற - நாடாளு மன்ற உறுப்பினர்கள் குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது.

2019, 2024 தேர்தல்களின்போது, இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தற்போதைய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் களின் 4 ஆயிரத்து 809 பிரமாணப் பத்திரங் களில் 4 ஆயிரத்து 693 பத்திரங்களை ஆய்வு  செய்யப்பட்டதில், 16 எம்.பி.க்கள், 135 எம்.எல்.ஏ.க்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்வது தெரிய வந்தது.

அறிக்கையின்படி, இவ்வாறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வோரில், 25 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்திலும், 21 பேர்களு டன் ஆந்திரம் இரண்டாவது இடத்திலும், ஒடிசா 17 பேருடன் மூன்றாவது இடத்திலும் வந்துள்ளன.

இதில் அரசியல் கட்சிகள் என்ற வகை யில், பாஜக முதலிடம் பிடித்துள்ளது. அதிக பட்சமாக அந்த கட்சியைச் சேர்ந்த 54 எம்.பி.  - எம்.எல்.ஏ.க்கள் பெண்களுக்கு எதிரான  பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர் களாக இருக்கின்றனர். பாஜகவுக்கு அடுத்த படியாக, காங்கிரஸில் 23 பேரும், தெலுங்கு தேசம் கட்சியில் 17 பேரும் பாலியல் வழக்கு களில் சிக்கியிருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.