கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவி லில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் 2.90 கி.மீ. தூரத்திற்கு பம்பையில் இருந்து பூஜை பொருட்களை கொண்டு செல்ல “ரோப் கார்” அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய வன அமைச்ச கம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கர்நாடக மாநிலத்தில் சுமார் ரூ.1400 கோடி முதலீட்டில் குளிர்பான நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை இலை சின்னம் வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகருக்கு “ஏர் கூலர்” வசதி செய்து கொடுக்குமாறு தில்லி நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. வெப்ப அலை காரணமாக தோலில் தடிப்புகள் ஏற்படுவதாக சுகேஷ் “ஏர் கூலர்” வசதி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாரான விமா னத்தில், வாக்குவாதம் செய்ததை தடுத்த விமான பணியாளரை கடித்த பெண் பயணி மீது உத்த ரப்பிரதேச போலீஸ் வழக்குபதிவு செய்துள்ளது.
மதுபான கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லாவில் பாது காப்புப் படையினர் உடனான மோதலில் 2 பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள தாக ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
நீட் முறைகேடு விவகாரத்தில் ஜூன் 24 அன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியின் மாணவரணி பிரிவு முடிவு செய்துள் ளது.
கர்நாடகாவில் ரேணுகா சாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் சிறையில் உள்ள நிலையில் அவரது மேலாளர் ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பாட்னா
நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவர்
பாஜக கூட்டணி ஆளும்
பீகார் அமைச்சர்
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5 அன்று நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத் தேர்வில் பல்வேறு முறைகேடு சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலை யில், மாணவர்கள், பெற்றோர்கள், தேர்வு கண்காணிப்பாளர்கள் என நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப் பட்டவர்களில் பெரும்பாலானோர் பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், பாஜக கூட்டணி அமைச்சர் ஒருவரே நீட் வினாத்தாள் விற்பனை கும்ப லின் தலைவராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத் தாள் விற்பனை விவகாரத்தில் பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் 4 மாணவர்களை கைது செய்துள்ளனர். இதில் அனுராக் என்ற மாணவர் தனக்கு தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கிடைத்த தாகவும், பீகார் அமைச்சர் ஒருவர் உதவி யதாகவும் விசாரணையில் தெரிவித்துள் ளார். அதாவது பாட்னாவில் நீட் எழுதிய அனுராக் என்ற மாணவர் அமைச்சர் ஒரு வரின் பரிந்துரையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். வினாத்தாள் கசிவு புகாரில் கைது செய்யப்பட்ட சிக்கந் தர் என்பவர், அமைச்சர் பரிந்துரையின் பேரில் மாணவரை அழைத்துச் சென்றுள் ளது விசாரணை மூலம் அம்பலமாகியுள் ளது. ஆனால் அந்த அமைச்சர் பாஜக வைச் சேர்ந்தவரா? கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவரா? என்பது தெளிவாகவில்லை.
கொல்கத்தா
ஜல்தவாரா பூங்காவில் பயங்கர தீவிபத்து
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்
மேற்குவங்க மாநிலத்தின் அலி பூர்த்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜல்தவாரா தேசிய பூங்கா. ஒற்றைக்கொம்பு காண்டா மிருகங்களுக்கு பெயர் பெற்ற இந்த தேசிய பூங்காவில் ஹாலாங் என்ற பெய ரில் மூன்று மாடிகள் கொண்ட வன பங்க ளாவும் உள்ளது.
இந்நிலையில், செவ்வாயன்று இரவு 9 மணியளவில் திடீரென ஹாலாங் மாளி கையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பலகட்டா, ஹசிமாரா பகுதியில் இருந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் கடுமையான போராட்டத் திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் ஹாலாங் சுற்றுலா விடுதி முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்ட தாகவும், சுற்றுலா விடுதியின் கட்டடம் முழுவதும் மரப் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்டதால் தீ முழுவதும் பற்றி எரிந்ததாகவும் தீயணைப்பு துறை அதி காரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத் தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட் கள் சேதமடைந்தன என மேற்குவங்க அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுதில்லி
வெப்ப அலையால் நிரம்பும் தில்லி மயானம்
ஒரே நாளில் 95 உடல்கள் தகனம்
நாட்டின் தென் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் வெயி லின் தாக்கம் குறைந்து பருவ மழை கொட்டி வரும் நிலையில், வடமாநி லங்களில் கடந்த ஒன்றரை மாதங்களாக வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்த பாடில்லை. குறிப்பாக ராஜஸ்தான், தில்லி, உத்தரப்பிரதேசம், குஜராத், ஹரி யானா, தில்லி, பீகார் உள்ளிட்ட மாநி லங்களில் 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு அருகே வெப்ப அலை கொளுத்தி வருகிறது. இதனால் வடமாநிலங்களில் வெப்ப அலைக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.
இந்நிலையில், தில்லியில் வெப்ப அலையை தாக்குப்பிடிக்க முடியாமல் முதியவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இதனால், தில்லியின் நிகாம்போத் காட் பகுதியில் உள்ள மயா னத்துக்கு சடலங்கள் வருவது அதிகரித் துள்ளது. செவ்வாயன்று நிகாம்போத் காட் மயானத்தில் 95 உடல்கள் தகனம் செய்யப்பட்டன. வழக்கமாக நாளொன் றுக்கு 40 முதல் 50 உடல்கள் தான் தக னம் செய்யப்படும். ஆனால், கொரோனா காலத்திற்குப் பிறகு இவ்வளவு உடல் கள் (95 உடல்கள்) எரியூட்டப்படுவது இதுமுதல் முறை என்று நிகாம்போத் காட் நிர்வாகத்தினர் கூறினர். கொரோனா காலகட்டமான 2021 ஏப்ரல் மாதத்தில் நிகாம்போத் காட் மயானத்தில் ஒரே நாளில் 107 இறந்த உடல்கள் எரியூட்டப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
புதுதில்லி
தண்ணீர் பிரச்சனையை தீர்க்காவிட்டால் உண்ணாவிரதம்
மோடி அரசுக்கு தில்லி அரசு எச்சரிக்கை
பாஜக ஆளும் ஹரியானா மாநில அரசிடம் மறைமுக மாக உத்தரவிட்டு ஆம் ஆத்மி ஆளும் தில்லி மாநிலத்தில் கடும் தண் ணீர் பஞ்சத்தை உருவாக்கியுள்ளது மோடி அரசு. இந்த பழிவாங்கல் நடவ டிக்கை காரணமாக தில்லி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலை யில், தண்ணீர் பிரச்சனையை தீர்க்கா விட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக மோடி அரசுக்கு, தில்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தில்லி நீர்வளத் துறை (பொதுப்பணித்துறை) அமைச்சர் அதிஷி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகை யில், “தில்லியின் தண்ணீர் பிரச்சனை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அடுத்த இரண்டு நாட்க ளுக்குள் இதற்கு தீர்வு இல்லை என்றால் வரும் ஜூன் 21அன்று முதல் காலவரை யற்ற உண்ணாவிரதத் தில் ஈடுபடுவோம்” என கூறினார்.