india

img

வன்முறையை தூண்டும் பாஜக

காங்கிரஸ் - ஆம் ஆத்மி அடங் கிய “இந்தியா” கூட்டணி வெற்றி பெறும் சூழலை தேர் தல் அதிகாரி மூலம் தடுத்து, தில்லு முல்லு வேலைகளை அரங்கேற்றி சண்டிகர் மேயர் பதவியை கைப்பற்றியது பாஜக.

இதனை எதிர்த்து தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி வெள்ளியன்று முறை யான அறிவிப்புடன் போராட்டம் நடத்தி யது. இந்த போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில், எவ்வித அறிவிப்பின்றி ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப் போவ தாக பாஜக அறிவித்தது. இதனால் மத்திய தில்லியில் பதற்றமான சூழல் உருவான நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை பாஜக தலை மையகத்துக்கு வெளியே போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், கட்சி தொண்டர்கள் கைது செய்தது. மேலும் காலைநேரத்தில் போராட்டத்துக்கு கிளம்பிய ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை முன்கூட்டியே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

ஆனால் போட்டி போராட்டம் நடத்த ப்போவதாக குவிந்த பாஜக குண்டர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இந்த விவகாரத்திற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.