2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 7-ஆம் வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த மே 19-ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அவற்றை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்து. 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. பொதுமக்கள் கையிருப்பில் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 தினங்களுக்கு முன் பெட்ரோல் பங்குகள், பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை பெற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 7-ஆம் வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.