india

img

வாரணாசியில் மோடி வேட்புமனு தாக்கல்!

வாரணாசி, மே 14 - பிரதமர் நரேந்திர மோடி தான் போட்டி யிடும் வாரணாசி மக்களவைத் தொகுதி யில் செவ்வாயன்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டு களில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் மோடி, இப்போது 3-ஆவது முறையாக மீண்டும் வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, வேட்புமனுத் தாக்கலுக்கு  மே 14-ஐ, பிரதமர் மோடி தேர்வு செய்திருந்தார். ஏனெனில், மே 14 கங்கா சப்தமி  நாள் என்றும், இந்த நாளில் கடவுள் கங்கா நேரடியாக பூமிக்கு வருவதாக வும், இது இந்துக்களை பொறுத்தமட்டில் முக்கிய நாளாகவும் பார்க்கப்படுகிறது. கங்கா சப்தமி தினத்தில் புஷ்ய நட்சத்திரம் ஒன்றாக இணைவதாகவும், அப்போது அபிஜித் முகூர்த்தம் மற்றும் ஆனந்த யோகம் ஆகியவற்றுடன் ஒத்துப்போவதாகவும்  பழைய பஞ்சாங்க சாஸ்திரங்கள் கூறுகின்றன.  

எனவே, அந்த நாளைத் தேர்ந்தெடுத்த பிரதமர் மோடி வேட்புமனு தாக்கலுக்கு தாஸ்வாமேத் காட்டில் கங்கை நதியில் ஸ்நானம் செய்து கங்கா பூஜை செய்தார். அடுத்ததாக வாரணாசியில் உள்ள கால பைரவா கோவிலில் பூஜை செய்தார். அதன்பிறகு புஷ்ய நட்சத்திரம் காலம் எனக் கூறப்படும் காலை 11.23 மணிக்குத் துவங்கி முதல் 1.05 மணி வரையிலான காலத்தைக் கணக்கில் கொண்டு, 11.40 மணிக்கு பிரதமர் மோடி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். நாள் நட்சத்திரம் மூலமாவது தோல்வியிலிருந்து தப்பித்து விட மாட்டோமா? என்ற எண்ணி மோடி களத்தில் குதித்துள்ளார்.